ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்

கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி மானவ் சுதர் அசத்தல்!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Manav Sudhar

மானவ் சுதர் - படம் | AP

Published On :22 ஜூன் 2026, 9:52 pm IST

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான மானவ் சுதர் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். வார்விக்‌ஷைர் அணிக்காக விளையாடி வரும் மானவ் சுதர் கவுன்டி கிரிக்கெட்டில் முதல் ஐந்து - விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சோமர்செட் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மானவ் சுதர் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மானவ் சுதர், 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Manav Suthar, the spinner of the Indian team, has taken 7 wickets in county cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.