/

கவுன்டி கிரிக்கெட்டில் அசத்திய மானவ் சுதர்!

கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

News image

மானவ் சுதர் - படம் | AP

Updated On :13 ஜூன் 2026, 4:48 pm IST

கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மானவ் சுதர் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அறிமுகப் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு மானவ் சுதருக்கு கிடைத்தது. கவுன்டி கிரிக்கெட்டில் வார்விக்‌ஷையருக்காக அறிமுக வீரராக களமிறங்கிய மானவ் சுதர், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

யோர்க்‌ஷையர் அணி வீரர்கள் சாம் வொயிட்மேன் (55 ரன்கள்), வில்லியம் லக்ஸ்டான் (167 ரன்கள்) இவர்கள் இருவரின் விக்கெட்டினையும் மானவ் சுதர் கைப்பற்றினார்.

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் அடுத்த இரண்டு சுற்றுகளுக்காகவும் வார்விக்‌ஷையர் அணிக்காக விளையாட மானவ் சுதர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian spinner Manav Suthar impressed by taking two wickets in his debut county cricket match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.