
டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே; மனம் திறந்த மானவ் சுதர்!
டெஸ்ட் கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமும் என இளம் வீரர் மானவ் சுதர் மனம் திறந்துள்ளார்.

மானவ் சுதர் - படம் | AP
டெஸ்ட் கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமும் என இளம் வீரர் மானவ் சுதர் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அண்மையில் நியூ சண்டீகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மானவ் சுதர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும், அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்தான் தனக்கு எல்லாமும் என இளம் வீரர் மானவ் சுதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் விளையாடத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சிவப்பு பந்து கிரிக்கெட் எனக்கு எல்லாமுமாக இருந்துள்ளது. சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது வீரர் ஒருவரின் உயரிய லட்சியமாக இருக்கும். அதனால், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக விளையாடினாலும் அல்லது ரஞ்சி கோப்பையில் விளையாடினாலும் என்னுடைய இலக்கு எப்போதும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதாக இருந்தது.
இந்திய அணியின் அறிமுக வீரருக்கான தொப்பியை வழங்கும்போது, குல்தீப் யாதவின் பேச்சு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு அதிகம் ஊக்கமளித்தனர். அதனால் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக என்னிடம் இன்று நீங்கள் அறிமுக வீரராக களமிறங்குகிறீர்கள் என்றார்கள். அது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது.
நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. இது என்னுடைய கனவு மட்டுமின்றி, என்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரின் கனவாகவும் இருந்தது என்றார்.
Summary
Young player Manav Suthar has opened up, stating that Test cricket means everything to him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






