தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அரை இறுதியில் பயஸ்-பூபதி ஜோடி

சென்னை, ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.  ÷இவர்கள் 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் மார

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:48 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

 ÷இவர்கள் 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் மார்க்ஸ்- பிரிட்டனின் கென் கப்ஸ்கி ஜோடியை காலிறுதியில் வீழ்த்தினர்.

 ÷சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் 4 கேம்களை இரு ஜோடிகளும் மாறிமாறி தங்கள் வசமாக்கி சமநிலைப் பெற்றனர். இரண்டாவது கேமில் மகேஷ் பூபதியின் சர்வீஸில் ஆக்ரோஷம் தெரிந்தது. 5-வது கேமில் சிறப்பாக ஆடிய மகேஷ் பூபதி நேர்த்தியான ஷாட்களை அடித்து எதிர் ஜோடியை திணறடித்தார். இதன் மூலம் இந்திய ஜோடி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் 10-வது கேமில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று முடிவுக்கு கொண்டு வந்தனர்.

 இரண்டாவது செட்டில் முதல் கேமிலேயே பிலிப்-கென் ஜோடியின் சர்வீûஸ முறியடித்து முன்னிலை பெற்றது இந்திய ஜோடி. இரண்டாவது கேமில் பயஸ் சில அருமையான சர்வீஸ்களை அடித்து அந்த செட்டைக் கைப்பற்ற உதவினார். இருப்பினும் 4-வது கேமில் மகேஷ் பூபதியின் சில தவறான ஷாட்களால் அந்த கேம் எதிர் பிரிவு வசமானது. இதனால் இருவரும் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

 இதனால் உற்சாகமடைந்த பிலிப்-கென் ஜோடி அடுத்த கேமை அருமையாக ஆடி, இந்திய ஜோடிக்கு நெருக்குதலை அளித்தது. அதன்பின்னர் அடுத்தடுத்த கேம்களை இரு ஜோடிகளும் மாறி மாறி பெற்றதால் 2-வது செட் 6-6 என்ற கணக்கில் சமநிலை ஆனது.

 இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. டை பிரேக்கரில் துடிப்போடு ஆடிய இந்திய ஜோடி 7-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றியது. இதனால் 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றது.

 ÷தொடர்ந்து தாங்கள் விளையாடிய பந்துகளில் பயஸýம், பூபதியும் கையெழுத்திட்டனர். பூபதி பந்துவீச, பயஸ் கிரிக்கெட் பேட்டால் ரசிகர்களை நோக்கி பந்தை அடித்தார். அதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாய்ந்து சென்று பிடித்து வைத்துக் கொண்டனர்.

 அரைஇறுதியில் பெர்டிச்

 ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்லோவேகியாவின் பிளாஸ் காவ்சிச்சை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார் பெர்டிச்.

 ÷மற்றொரு ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் úஸவியர் மலிஸ் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜார்ன் பாவை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதிபெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.