திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இறுதிச்சுற்றில் பயஸ்-பூபதி: பரபரப்பான ஆட்டத்தில் குரேஷிய ஜோடியை வென்றது

 சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

 சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்கிறது.

 ÷சனிக்கிழமை நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-1, 6-7, 10-5 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்-இவான் டோடிக் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 ÷முன்னதாக மாலையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றது. பின்னர் நடந்த பரபரப்பான இரண்டாவது செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் குரேஷிய ஜோடியிடம் இழந்தது. இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

 டை பிரேக்கர் வாய்ப்பில் முதல் 8 கேம்களில் இரு ஜோடிகளும் 4-4 என்ற சமநிலைப் பெறவே பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பரபரப்போடு காணப்பட்டனர். ஆனால் இந்திய ஜோடி சிறப்பாக ஆடி அடுத்த 4 கேம்களை தங்கள் வசமாக்கி, இறுதியில் 10-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய ஜோடி வெற்றிபெற்றதும் மைதானமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

 மற்றோர் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடி 2-6, 6-3, 10-7 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சைமன் பொலேலி-செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.