

ஹாமில்டன், ஜன.8: நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டி நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரிலுள்ள செட்டான் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2-ம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் 15 ரன்கள் சேர்த்த நிலையில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பிரன்டன் மெக்கல்லம் 56, குப்தில் 50, வில்லியம்ஸன் 50, செüத்தி 56 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் வீரர்கள் தன்வீர் அகமது 4 விக்கெட்டுகளும், அப்துர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், உமர் குல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ûஸ பாகிஸ்தான் துவக்கியது. தெüபீக் உமர் 54, அஸர் அலி 24, யூனிஸ் கான் 23 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர்.
சுருக்கமான ஸ்கோர்
நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 275 (மெக்கல்லம் 56, குப்தில் 50,
வில்லியம்ஸன் 50, செüத்தி 56,
தன்வீர் அகமது 4வி-63,
ரஹ்மான் 3வி-51)
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 235-4வி (ஆசாத் ஷாபிக் 74*, மிஸ்பா உல் ஹக் 50*, மார்ட்டின் 2வி-67, ஆர்னெல் 2வி-53).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.