அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியின் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி.
முன்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியுற்றது. தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4-3 என்ற கோல் கணக்கிலும், அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் முக்கியமான கட்டத்தில் எதிரணி கோலடிக்க, வெற்றி வாய்ப்பு நழுவியது.
அதனால், இந்த ஆட்டத்தில் விழிப்புடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்க வைக்க இந்தியா போராடும்.
6 அணிகள் பங்கேற்றுள்ள இப் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளைப் பெற்றுள்ள மலேசிய அணி 2-ம் இடத்தில் உள்ளது. 3 புள்ளிகளுடன் கொரிய அணி 3-ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 4-ம் இடத்திலும் உள்ளன. புள்ளிகள் பட்டியலில் வெற்றிக் கணக்கைத் தொடங்காத இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் கடைசி இரு இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


