தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: இன்று தொடக்கம்

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

News image
Updated On :11 மார்ச் 2013, 7:33 pm

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

இப்போட்டியின் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நெவால் மீண்டும் பட்டத்தைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இம்முறை அவர் வெற்றி பெற்றால், தொடர்ந்து 3 முறை இப்பட்டத்தைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவார்.

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் தொடங்கும் இப்போட்டியில் சாய்னா நெவால் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்தில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் தோல்வியுற்ற சாய்னா, ஸ்விஸ் பட்டத்தை வென்று ஆறுதலடைவார் என்று தெரிகிறது.

சாய்னா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸின் சஷினா விக்னெஸ் வாரனை எதிர்கொள்கிறார். இப்போட்டியின் காலிறுதி ஆட்டம் வரை சாய்னா தடை ஏதுமின்றி எளிதாக முன்னேறி விடுவார். ஆனால், காலிறுதி ஆட்டத்தில் அவருக்கு சவால் காத்துள்ளது. இந்த ஆட்டத்தில் அவர், சீனா தைபேவின் டுஸý யிங் டாய் என்ற வீராங்கனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில், சீனாவின் ஷிக்ஸியான் வாங் மற்றும் தாய்லாந்தின் ரட்சனொக் இன்டனான் உள்ளிட்ட வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.