பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

டெஸ்ட்: 175 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 60.5

News image
Updated On :22 மார்ச் 2013, 12:55 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 60.5 ஓவர்களில் 175 ரன்களுக்கு சுருண்டது.

மேற்கிந்தியத் தீவுகளின் டொமினிகாவில் புதன்கிழமை தொடங்கிய இப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கேப்டன் டெய்லர் 33, சிபாண்டா 32, வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் விரைவாக வெளியேற அந்த அணி 175 ரன்களில் சுருண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷில்லிங்ஃபோர்டு 5 விக்கெட்டுகளையும், மார்லான் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள்-181/4 இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

சந்தர்பால் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக கிறிஸ் கெயில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.