தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. போட்டி மழை காரணமாக 25 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். நேற்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 16,000 ரன்கள் குவித்து அவர் சாதனைப் படைத்துள்ளார்.
Scaling Mt. 16,000 ð»
— BCCI (@BCCI) June 13, 2026
A monumental milestone unlocked by Rohit Sharma as an opener in international cricket ðð«¡
Updates â¶ï¸ https://t.co/lCuohEZYAl #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @ImRo45 pic.twitter.com/vyC4C0oPvg
இதுவரை இந்திய அணிக்காக ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4301 ரன்களும், 283 ஒருநாள் போட்டிகளில் 11593 ரன்களும், 159 டி20 போட்டிகளில் 4231 ரன்களும் எடுத்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது இந்திய அணிக்காக அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian captain Rohit Sharma has set a new record by scoring the most runs as an opening batsman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

முதல் இந்திய வீரர்... லார்ட்ஸில் வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

நான் ஓய்வு பெறும் வரை இந்த பேச்சுகள் ஓயப் போவதில்லை: ரோஹித் சர்மா

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




