நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாட்ரிட் ஓபன்: இறுதிச் சுற்றில் செரீனா, ஷரபோவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :12 மே 2013, 1:11 am IST

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் மரியா ஷரபோவா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் அனா இவானோவிச்சையும், செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

தற்போதைய நிலையில் செரீனா வில்லியம்ஸ் தரவரிசையில் முதலிடத்திலும், ஷரபோவா 2-வது இடத்திலும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் செரீனா வெல்லும் பட்சத்தில் அவர் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வார். ஒருவேளை ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றால், அவர் முதலிடத்தைப் பிடிப்பார்.

நடால் வெற்றி: சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரரான பாப்லோ அன்டுஜாரை வீழ்த்தி இறுதிச் சுற்றை உறுதி செய்தார்.

முன்னதாக சகநாட்டவரான டேவிட் ஃபெரருக்கு எதிரான காலிறுதியில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தபோதும், அடுத்த இரு செட்களையும் 7-6 (3), 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்.

முர்ரே தோல்வி: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-7, 4-6 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் தோல்வி கண்டார். தாமஸ் பெர்டிச், அடுத்த சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார்.

வாவ்ரிங்கா தனது காலிறுதிச் சுற்றில் 6-2, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை தோற்கடித்தார். பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியதன் மூலம் சர்வதேச தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள வீரர்களின் ஆட்டம் மாட்ரிட் ஓபனில் முடிவுக்கு வந்தது. முன்னதாக ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பூபதி-போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஜோடி 2-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெர்மி சார்டி-போலந்தின் லூகாஸ் குபோட் ஜோடியிடம் தோல்வி கண்டது.

இதன்மூலம் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு இந்தியாவின் பயஸ், சானியா மிர்சா ஜோடிகள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.