கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தில் ஜலந்தர் இ.எம்.இ. அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான இந்தப் போட்டிகள் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆந்திர போலீஸ் அணியும், ஜலந்தர் இ.எம்.இ. அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜலந்தர் அணியின் கிரஞ்ச், ஹவ்தார்சிங், பிஜுசிங், கலந்தர்முண்டா ஆகியோர் தலா ஒரு கோல்களை அடிக்க 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2ஆவது பாதி ஆட்டத்திலும் ஜலந்தர் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. அந்த அணியின் கலிவாணன் அடுத்தடுத்து 2 கோல்களும், குருஜிந்தர்சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோலும் அடித்தனர். ஆந்திர அணிக்கு ஒரே ஒரு ஆறுதல் கோல் மட்டுமே கிடைத்தது. 59ஆவது நிமிடத்தில் அந்த கோலை கிருஷ்ணகிஷோர் அடித்தார். முடிவில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. அணி வெற்றி பெற்றது.
2ஆவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் சார்லஸ், ராஜா ஆகியோர் 11 மற்றும் 24ஆவது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர். 26ஆவது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் சேம்-சைடு கோல் போட்டார்.
இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை பெற்றது.
2ஆவது பாதி ஆட்டத்திலும் சென்னை அணியின் அசத்தல் ஆட்டம் தொடர்ந்தது. அந்த அணியின் ஞானவேல் 47ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் முறையிலும், 48ஆவது நிமிடத்தில் காட்லின்ஜேம்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.
51ஆவது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் ராதாகிருஷ்ணன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ஜலந்தர் இஎம்இ அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இன்றைய ஆட்டங்கள்
பிற்பகல் 3: தமிழ்நாடு லெவன்-ஜலந்தர் பஞ்சாப் போலீஸ்.
மாலை 4.30: ரெயின்போ ஹாக்கி கிளப்-
ஹாக்கி ஆந்திரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

உளுந்தூா்பேட்டையில் வெற்றிக்காக போராடும் திமுக, அதிமுக...

விடைபெற்றது தோ்தல் திருவிழா
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

