மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால் இரு அணிகளுமே சிறந்த வீரர்களைக் களமிறக்கியது.
மும்பை அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அணியில் மேக்ஸ்வெல், குல்கர்னி, ரிஷி தவாண் மற்றும் நாதன் குல்டர்-நீலி ஆகியோருக்குப் பதிலாக வேயன் ஸ்மித், மிச்சல் ஜான்சன், முனப் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அதேசமயம், சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.
அதிரடியான தொடக்கம்: ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக ஆரம்பித்தார் சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹசி. இதைத் தொடர்ந்து ஹசியும், முரளி விஜயும் அதிரடியாக விளையாடினர்.
அணியின் ஸ்கோர் 52-க உயர்ந்தபோது 23 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார்.
இந்த ஜோடி, மும்பை வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் சேர்த்தது. குறிப்பாக மைக் ஹசி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 40 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 12.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100ஐ தொட்டது.
இதனிடையே, மறுபுறம் அதிரடி ஆட்டத்தினால் ரெய்னா 29 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகம் காட்டிய ரெய்னா பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தார். இதனால், 16.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 150ஐ கடந்தது.
கடைசிக் கட்டத்தில் ஹசி,ரெய்னாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த மும்பை வீரர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால், இறுதிவரை மும்பை வீரர்களால் 2-வது விக்கெட்டைக் கைப்பற்ற முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் சுரேஷ் ரெய்னா 42 பந்துகளில் 82 ரன்கள் (5 சிக்ஸர்,5 பவுண்டரி), ஹசி 58 பந்துகளில் 86 ரன்கள் (2 சிக்ஸர், 10 பவுண்டரி) எடுத்தனர்.
கடைசி 10 ஓவரில் மட்டும் சூப்பர் கிங்ஸ் அணி 123 ரன்கள் குவித்தது. மும்பை அணித் தரப்பில் போலார்ட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

உளுந்தூா்பேட்டையில் வெற்றிக்காக போராடும் திமுக, அதிமுக...

விடைபெற்றது தோ்தல் திருவிழா
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


