ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 10-0 என்ற கோல் கணக்கில் தஹிதி அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் ஃபிஃபா கால்பந்து போட்டிகளில் மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை படைத்தது ஸ்பெயின். ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ டோரஸ் 4 கோல்களையும், டேவிட் வில்லா 3 கோல்களையும், டேவிட் சில்வா 2 கோல்களையும் அடித்தனர்.
கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினும், 138-வது இடத்தில் இருக்கும் தஹிதியும் மோதின.
ஆரம்பம் முதலே ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது தஹிதி. இதனால் 5-வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ டோரஸ் முதல் கோலை அடித்தார். இதையடுத்து 31-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு 2-வது கோல் கிடைத்தது. இந்த கோலை டேவிட் சில்வா அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் (33-வது நிமிடம்) டோரஸ் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஸ்பெயின்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 39 மற்றும் 49-வது நிமிடங்களில் டேவிட் வில்லாவும், 57-வது நிமிடத்தில் டோரஸýம் கோலடிக்க ஸ்பெயின் 6-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் டேவிட் வில்லா 3-வது கோலை அடிக்க, அடுத்த 2-வது நிமிடத்தில் (66-வது நிமிடம்) ஜுவான் மேட்டா கோலடித்தார்.
கடைசி நிமிடத்துக்கு முந்தைய நிமிடத்தில் (89-வது நிமிடம்) டேவிட் சில்வா கோலடிக்க, ஸ்பெயின் 10-0 என்ற கோல் கணக்கில் தஹிதியை வீழ்த்தி சாதனை வெற்றியை ருசித்தது.
ஃபிஃபா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதற்கு முன்னர் எந்த அணியும், 10 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதில்லை. 1954 உலகக் கோப்பை போட்டியில் ஹங்கேரி 9-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவையும், 10-1 என்ற கோல் கணக்கில் எல் சல்வடார் (1982 உலகக் கோப்பை) அணியையும் வீழ்த்தியது. இதேபோல் 1974 உலகக் கோப்பையில் யூகோஸ்லேவியா 9-0 என்ற கோல் கணக்கில் ûஸயிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிகள்தான் சாதனை வெற்றிகளாக இருந்தன. இப்போது அதை ஸ்பெயின் முறியடித்துள்ளது.
தஹிதி அணி 2-வது முறையாக 0-10 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டுள்ளது. முன்னதாக 2004-ல் 0-10 என்ற கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது. 1933-ல் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் ஸ்பெயின் 13-0 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவை வீழ்த்தியது. அதுதான் அந்த அணி கண்ட பெரிய வெற்றியாகும்.
உருகுவே வெற்றி: சல்வடார் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்தது.
100-வது ஆட்டத்தில் விளையாடிய உருகுவே அணியின் டீகோ ஃபோர்லான் 51-வது நிமிடத்தில் கோலடித்தார். இது அவருடைய 34-வது கோலாகும். இதன்மூலம் சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த உருகுவே வீரர் என்ற பெருமையை அவர் மீண்டும் பெற்றுள்ளார்.
அரையிறுதி வாய்ப்பு எப்படி? "பி' பிரிவில் லீக் ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள ஸ்பெயின் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நைஜீரியா, உருகுவே ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-வது இடங்களிலும், தஹிதி அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளன. தற்போதைய நிலையில் தஹிதி அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஸ்பெயின் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்பெயினும், நைஜீரியாவும் மோதுகின்றன. இதேபோல் உருகுவேயும், தஹிதியும் அணியும் மோதும். இதில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றுவிட்டாலே, ஸ்பெயினும், உருகுவேயும் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
டோரஸ் 4 கோல்கள்
1}வது கோல் 5}வது நிமிடம்
2}வது கோல் 33}வது நிமிடம்
3}வது கோல் 57}வது நிமிடம்
4}வது கோல் 78}வது நிமிடம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



