/
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தில்ஷான் முத்தரப்புத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரையிறுதியில் விளையாடியபோது அவருக்கு கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் வரும் 28-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









