சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி

ஜிம்பாப்வேயில் நடைபெறும் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது.

News image
Updated On :22 ஜூலை 2013, 1:02 am IST

ஜிம்பாப்வேயில் நடைபெறும் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது.

இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளன. இந்திய அணியின் தூணாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோலி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கும் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் கழித்து ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி தற்போது செல்கிறது. கடைசியாக, முத்தரப்புத் தொடரில் பங்கேற்க சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி 2010-ம் ஆண்டு ஜிம்பாப்வே சென்றது. ஆனால், அப்போது இறுதிப்போட்டியை எட்ட முடியவில்லை. முத்தரப்புத் தொடருக்குப் பிறகு, ஜிம்பாப்வேயுடன் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள அணியில் ரெய்னா இடம் பிடித்துள்ளார். அவரது அனுபவம் அணிக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24-ம் தேதி தொடங்கும் இப்போட்டி ஆக்ஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அணி வீரர்கள் விவரம்

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு, அஜிங்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், முகமது சமி, வினய் குமார், ஜெய்தேவ் உனட்கத் மற்றும் மோஹித் சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.