சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Updated On :22 ஜூலை 2013, 1:04 am IST

16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2011-ம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி காத்மாண்டுவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குரூப் "பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும், இலங்கையும் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளைப் பெற்றது.

இந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங் (23-வது நிமிடம், 88-வது நிமிடம்) இரு கோல்களையும், கிருஷ்ணா பண்டிட் (21-வது நிமிடம்) மற்றும் சக்ரவர்த்தி (66-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

2011-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.