வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ: இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வியாழக்கிழமை மோதுகிறது.

Updated On :11 செப்டம்பர் 2013, 11:23 pm IST

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வியாழக்கிழமை மோதுகிறது.

இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய ஏ அணி ஏற்கெனவே 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. தற்போது 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்று நியூஸிலாந்து ஏ அணியை வாஷ் அவுட்டாக்க இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய ஏ அணி, முதல் இரு ஆட்டங்களிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இது, இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங்கைக் காண்பிக்கிறது. இந்திய ஏ அணியின் தொடக்கம் சிறப்பாக உள்ளது கூடுதல் பலமாகும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று தந்த பெருமைக்குரிய கேப்டன் உன்முக்த் சந்த், நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 94 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 59 ரன்களும் எடுத்தார். இதனால், அவர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதேபோல், முதல் ஆட்டத்தில் சதமடித்த உத்தப்பாவுக்கும் மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு வந்துள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரை மனேரியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்úஸனா மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஓர் ஆட்டத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூஸிலாந்து வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்கள் அதிக ரன்கள் குவிக்காததும், பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாததும் அந்த அணியின் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.