பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 294 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இப்போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே, முதலில் பேட் செய்தது.
ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே, ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர் மாவோயோவின் விக்கெட்டை இழந்தது. அணியின் ஸ்கோர் 31ஆக உயர்ந்தபோது 14 ரன்கள் எடுத்திருந்த சிபாந்தா பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து அந்த அணி வீரர்கள் சிறிது இடைவெளியில் வெளியேறியபடி இருந்தனர். அந்த அணி, முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.
2ஆம் நாளான புதன்கிழமை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 109.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக மசகட்ஸா 75 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 4 விக்கெட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. அந்த அணி 96 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் மன்சூர், யூனிஸ் கான் சிறப்பாக விளையாட, அணி சரிவிலிருந்து மீண்டது. 2-ம் நாள் முடிவில் அந்த அணி 68 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. யூனிஸ் கான் 52 ரன்களுடனும், கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கலங்கரை விளக்கக் கப்பல்கள் இயக்குநரகத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஈரான் உடன் அமைதிப்பேச்சு! பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்க சென்ற வைபவ் சூர்யவன்ஷி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


