/

ஃபெராரி அணியுடன் 2014இல் இணைகிறார் ராய்க்கோனன்

ஃபின்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரர் கிமி ராய்க்கோனன், 2014-ம் ஆண்டில் ஃபெராரி அணியுடன் இணைய உள்ளார். 2 ஆண்டுகள் ஃபெராரி அணிக்காக கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பார் என்று ஃபெராரி அணி நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

Updated On :11 செப்டம்பர் 2013, 6:44 pm

ஃபின்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரர் கிமி ராய்க்கோனன், 2014-ம் ஆண்டில் ஃபெராரி அணியுடன் இணைய உள்ளார். 2 ஆண்டுகள் ஃபெராரி அணிக்காக கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பார் என்று ஃபெராரி அணி நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

33 வயது நிரம்பிய ராய்க்கோனன், 2007-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இவர், ஃபெராரி அணியுடன் இணைந்த பிறகு, ஸ்பெயினைச் சேர்ந்த ஃபெர்னாண்டோ அலோன்சாவுடன் கார் பந்தயப் போட்டிகளில் ஈடுபடுவார்.

ராய்க்கோனன், தற்போது லோட்டஸ்-ரினால்ட் அணிக்காக போட்டியிட்டு வருகிறார்.

இந்த ஆண்டு எஃப்1 கார் பந்தயத்தின் ஆஸ்திரேலிய கிராண்ட்ப்ரீயை ராய்க்கோனன் வென்றுள்ளார். புள்ளிகள் பட்டியலில் 132 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.