இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராஜஸ்தானுக்கு 142 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

News image
Updated On :13 மே 2013, 12:07 am IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி-முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது. 40 பந்துகளைச் சந்தித்த ஹசி 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா 1, கேப்டன் தோனி 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். மறுமுனையில் 49 பந்துகளில் அரைசதம் கண்ட முரளி விஜய், 50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். முன்னதாக விஜய் 46 ரன்களில் ரன் அவுட்டில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

கடைசிக் கட்டத்தில் பிராவோ 11 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிக்ஸர் இல்லை: சூப்பர் கிங்ஸ் பேட் செய்தால் அங்கு சிக்ஸருக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால் இந்த ஆட்டத்தில் மைக் ஹசி, விஜய் ஆகியோர் நிதானமாக ஆடியதாலும், தோனி, ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததாலும், சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. 16 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.