நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: தமிழக வீரர்கள் ஜெர்மனி பயணம்

ஜெர்மனியில் ஜூன் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கலந்து கொள்கின்றனர்.

News image
Updated On :31 மே 2013, 5:56 pm

வே.சுந்தரேஸ்வரன்

ஜெர்மனியில் ஜூன் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி வீரர்கள் அனைவரும் தில்லி வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் செல்கின்றனர்.

ஜெர்மனி ஸþல் நகரில் ஜூன் 4 முதல் 9-ம் தேதி வரையிலும், அதைத் தொடர்ந்து செகோஸ்லோவாகியா நாட்டின் பிளெஸன் நகரில் ஜூன் 13 முதல் 16-ம் தேதிவரையும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது.

இதில், மதுரை ரைஃபிள் கிளப்பைச் சேர்ந்த வி. சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், மூன்றாம் நிலை ஜூனியர் ஆடவர் பிரிவிலும், சென்னை ரைஃபிள் கிளப்பின் சந்தியா மூன்றாம் நிலை ஜூனியர் மகளிர் பிரிவிலும், ஆதேஷ் ஆடவர் பிரிவிலும், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப்பின் ஸ்ரீ நிவேதிதா 25 மீ. பிஸ்டல் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் முதன்முறையாக சர்வதேச அளவிலான பிஸ்டல், ரைஃபிள் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடு செல்கின்றனர்.

இது குறித்து மதுரை ரைஃபிள் கிளப் கௌரவச் செயலர் எஸ். வேல்சங்கர் புது தில்லியில் "தினமணி' நிருபரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

""சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் "ஷார்ட் கன்' பிரிவில் திருச்சியைச் சேர்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் பங்கேற்று பலமுறை பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஆனால், பிஸ்டல், ஃரைபிள் பிரிவுகளைச் சேர்ந்த தமிழக வீரர்களுக்கு தற்போதுதான் முதல் முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜூனியர் பிரிவில் இருந்து 4 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் ஜூன் 2-ம் தேதி தில்லியில் இருந்து ஜெர்மனி செல்கின்றனர். அதைத்தொடர்ந்து செகோஸ்லோவாகியாவின் (செக். குடியரசு) பிளெஸன் நகரில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று விட்டு ஜூன் 17-ம் தேதி இந்தியா திரும்புகின்றனர்.

துப்பாக்கி சுடும் வீரர் வி. சர்வேஷ் ஸ்வரூப் சங்கர் கூறுகையில், ""இப்போட்டியில் முதல் முறையாக கலந்து கொள்ள வெளிநாடு செல்கிறேன். ஜூனியர் மூன்றாம் நிலை பிரிவில் பங்கேற்கிறேன். இதற்காக தினமும் 5 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம்'' என்றார்.

மற்றொரு வீரரான ஆதேஷ், "போட்டிக்காக தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். பயிற்சியில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர்கிறேன். 40 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பதால் போட்டி கடுமையானதாகவே இருக்கும். எனினும், இந்தியாவுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என விரும்புகிறேன்'' என்றார்.

வீராங்கனை சந்தியா, "மூன்றாம் நிலை ரைஃபிள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளேன். அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதற்காக தீவிரப் பயிற்சியில்

ஈடுபட்டு வருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.