மாநில ஜூனியர் ஹாக்கி: திண்டுக்கல் அணி சாம்பியன்
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது.


பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது.
திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் பிப். 20 ம் தேதி தொடங்கி 4 தினங்கள் நடைபெற்றது. போட்டியில் சேலம், நாகப்பட்டினம், கோவை, வேலூர், திருவாரூர், திருவள்ளூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் விளையாடின.இதில் 4-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் அணி முதலிடம் பெற்றது. மதுரை அணி 2 ஆவது இடமும், தூத்துக்குடி மாவட்ட அணி 3 ஆவது இடமும், தஞ்சை மாவட்ட அணி 4 ஆவது இடமும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு ஹாக்கி கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ். முத்துக்கருப்பன் எம்.பி. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கி பாராட்டினார். நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாளை மண்டலத் தலைவர் ம. கிறிஸ்துராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பா. பிராங்க்பால்ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஏ. அந்தோணிதாமஸ், அமைப்பின் துணைத் தலைவர்கள் எம்.எஸ். டோம்னிக், டி. பால்ஆரோன், துணைச் செயலர்கள் எம். பீர்அலி, ஏ. ரவிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைப்பின் செயலர் எம். ராஜசேகர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...