சிஎஸ்கே அணி மீதான இரு ஆண்டுகள் தடையை நீக்கவேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.
2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்ட வழக்கை விசாரித்த லோதா தலைமையிலான குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. அதோடு சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டு அமைப்புகளில் பங்கேற்கமுடியாதபடி ஆயுள்கால தடைவிதித்தது.
இதனால் 2016-ம் ஆண்டுக்கான ஐபிஎல்- போட்டியில் சென்னை அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி வீரர்களின் எதிர்காலம் குறித்தும் குழப்பம் நிலவுகிறது. இதனால் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள். தோனியின் தீவிர ரசிகரான சரவணன் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.


சேவ் சிஎஸ்கே என்கிற பிரசாரத்துடன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே ரசிகர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. ரசிகர்களின் இந்த கோரிக்கை பிசிசிஐ மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படும் என்று சரவணன் தெரிவித்தார். சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் சென்னை மீதான இரு ஆண்டு தடை நீக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளார்கள். ட்விட்டரில் சிஎஸ்கேவுக்கு 18 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


