தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பயிற்சி ஆட்டம்: இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு!

முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.

Updated On :7 ஆகஸ்ட் 2015, 12:22 pm

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

இதற்கு முன்னோட்டமாக இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணிகளிடையிலான 3 நாள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற எதிரணியின் கேப்டன் லஹிரு திரிமானி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  அபாரமாக ஆடிய ரஹானே சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாளான இன்று, தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர் ரஜிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இறுதியில், 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் 5, அஸ்வின் 2, ஆரோன் 2, ஹர்பஜன் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.