ஆஷஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள 8, ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பில்லாமல் போகும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தோற்று ஆஷஸ் தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி குறித்து க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் பாண்டிங் கூறியதாவது:
இந்தச் சுற்றுப் பயணத்தில் ஆடுகிற 8 ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லாமல் போகலாம். இது பெரிய அதிர்ச்சி. பாதி ஆஸ்திரேலிய அணி காணாமல் போகும்.
உண்மை என்னவென்றால் ஆஸ்திரேலியா 60 ரன்னில் ஆல் அவுட் ஆன பிட்சில், இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா நன்றாக பேட்டிங்கும் செய்யவில்லை, பெளலிங்கும் செய்யவில்லை. இப்போது மீண்டும் 241 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இத்தனைக்கும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான சூழல் இருந்தநிலையிலும் என்றார்.
மேலும், 8 பேரில் 4 வீரர்களின் பெயர்களைக் அவர் குறிப்பிட்டுள்ளார். வாட்சன், ஹேடின், ரியான் ஹாரிஸ், ரோஜர்ஸ் ஆகியோர் இனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


