தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முத்தரப்புப் போட்டி: இந்தியா ஏ அணி சாம்பியன்!

குர்கீரத் சிங் - சாம்சன் ஆகிய இருவரும் கடைசி வரை பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2015, 11:39 am

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஏ அணி.

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது.

லீக் முடிவில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியும் 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருந்த இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் லீக் போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். கவாஜா 76, பர்ன்ஸ் 41 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

பிறகு ஆடிய இந்திய ஏ அணி 142 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் - சாம்சன் ஆகிய இருவரும் கடைசி வரை பொறுப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள். குர்கீரத் சிங் 87, சாம்சன் 24 ரன்கள் எடுத்தார்கள். 6 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது இந்தியா ஏ அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.