தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

டேவிஸ் போட்டி: இரட்டையர் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி!

Updated On :18 ஜூலை 2015, 5:35 am

இந்தியா - நியூசிலாந்து இடையே கிறிஸ்ட் சர்ச்சில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் இரண்டாவது நாளன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது.

நேற்று நடந்த ஒற்றையர் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி கண்டு 1-1 என சமநிலையில் இருந்தன. இன்று நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியா சார்பாக ரோஹன் பொபன்னா - சகத் மைனேனி ஆகியோரும் நியுசிலாந்து அணி சார்பாக டேனியல்-சிடக் ஆகியோரும் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6-3 7-6 6-3 என்ற நேர் செட்களில் நியூசிலாந்து ஜோடி வெற்றி கண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த வெற்றியினால் நியூசிலாந்து அணி 2-1 என முன்னணியில் உள்ளது. ஞாயிறு அன்று நடைபெறும் இரு ஒற்றையர் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும், அந்த அணி செப்டம்பரில் நடக்க உள்ள உலக குரூப் பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.