மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவின் கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.
சிலகாலமாக அவர் மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார்.
இவர் கிரிக்கெட்டில் மும்முரமாக ஆடிய காலத்தில் தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டதால் இவரால் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
தடை நீக்கப்பட்ட பிறகு, 1991-ல், இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கிளைவ் ரைஸ் இருந்தார். அப்போது அவருக்கு வயது 42. மொத்தமாக 3 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் இவர் அதிகம் சாதித்துள்ளார். பேட்டிங்கில் 40.95, பவுலிங்கில் 22.49 என சராசரிகளை வைத்துள்ளதால் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகப் புகழப்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 26, 331 ரன்களையும் 930 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


