இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. ஓ'கீஃபி 36 ரன்களுடனும், பெக்கீட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 349 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் பாபா அபரஜித் 5 விக்கெட்டுகளையும் ஓஜா 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தமுறை சிறப்பாக ஆடிய விராட் கோலி, 45 ரன்களில் அவுட் ஆனார். இந்தியா ஏ அணி பேட்ஸ்மேன்கள் பலரும் சிறப்பாக ஆடினாலும் களத்தில் யாராலும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.
அதிகபட்சமாக முகுந்த் 59 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 31, ஸ்ரேயாஸ் ஐயர் 48, நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. அபரஜித் (28), ஸ்ரேயாஸ் கோபால் (0) ஆகியோர் களத்தில் உள்ளார்கள். 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள இந்தியா ஏ அணியின் விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களுக்குள் எடுத்துவிட்டால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


