தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

6-ஆவது பட்டம் வென்றார் சானியா மிர்ஸா

குவாங்ஜு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்த பின்னர் சானியா வெல்லும் 6-ஆவது பட்டம் இதுவாகும்.

Published On :

குவாங்ஜு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்த பின்னர் சானியா வெல்லும் 6-ஆவது பட்டம் இதுவாகும்.

குவாங்ஜு ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்றது.

இதில், சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்திலுள்ள சானியா - ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சு ஷிலின் - யு ஷியோடி ஜோடியை எதிர்கொண்டது.

6-ஆவது பட்டம்:

இந்தப் போட்டியின் முடிவில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குளில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டில் சானியாவுக்கு இது 7-ஆவது சாம்பியன் பட்டமாகும். ஹிங்கிஸுடன் இணைந்து 6-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் சானியா, அமெரிக்காவின் பெதானி மட்டெக் சான்ட்ஸுடன் இணைந்து வெற்றி பெற்றிருந்தார். கடந்த மார்ச் மாதம் மார்ட்டினாவுடன் இணைந்த சானியா, இந்தியன் வெல்ஸ், மியாமி, சார்லெஸ்டன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன் மற்றும் தற்போதைய குவாங்ஜு ஆகிய போட்டிகளில் சாம்பியனாகி உள்ளார். அடுத்து உஹானில் நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றிக் கூட்டணியான சானியா - ஹிங்கிஸ் ஜோடி பங்கேற்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.