டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள். இதன்மூலம் 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவின் கோப்பை கனவை கலைத்தது.
செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் ஒருவர் ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
நிருபர்: ஒரு கிரிக்கெட் வீரர் சாதிக்கவேண்டிய அனைத்தையும் சாதித்துவிட்டீர்கள். இதற்குப் பிறகும் தொடர்ந்து விளையாட ஆர்வமாக உள்ளீர்களா?
தோனி: இங்க வாங்க. கொஞ்சம் ஜாலியா பேசலாம். இங்க வாங்க.
(தோனி காமெடி செய்கிறாரா, இல்லை நிஜமாகவே அழைக்கிறாரா என்று புரியாமல் நிருபர் தயங்க, அட வாங்க பாஸ் என்கிற தொனியில் குஷியுடன் கையை ஆட்டி நிருபரை அழைக்கிறார் தோனி. (வங்கதேசத்துக்கு எதிரான போட்டி முடிவடைந்தவுடன், இந்தியாவின் வெற்றியில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்று ஒரு நிருபரிடம் சூடாகப் பேசினார் தோனி! அதற்கு முற்றிலும் நேர்மாறான நடவடிக்கை இது!)
நிருபர் அருகில் வந்தவுடன் அவர் தோளில் கைபோட்டபடி பேசுகிறார்.
தோனி: நான் ஓய்வு பெறவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
நிருபர்: இல்லை, நான் கேள்விதான் கேட்டேன்...
தோனி: இந்திய நிருபர் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்பார் என எதிர்பார்த்தேன். ஏனெனில் அவர்களுடைய மகனோ, சகோதரரோ இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார்களா எனக் கேட்டிருப்பேன். சரி, எனக்குச் சரியான உடற்தகுதி இல்லை என எண்ணுகிறீர்களா?
நிருபர்: அப்படியெல்லாம் இல்லை.
தோனி: நான் ஓடுவதைப் பார்த்து இப்படிக் கேட்டீர்களா?
நிருபர்: நீங்கள் வேகமாகவே ஓடுகிறீர்கள்.
தோனி: 2019 உலகக்கோப்பை வரை நான் விளையாடுவேன் என நினைக்கிறீர்களா?
நிருபர்: ஆமாம். நிச்சயமாக.
தோனி: அவ்வளவுதான். நீங்களே கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டீர்கள்!
</p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


