புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவினர் தேர்வு செய்கின்றனர். இந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சந்தீப் பாட்டீல், ராபின் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜேசன் ஜில்லஸ்பி உள்ளிட்ட 57 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இவர்களில் 21 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இவர்களிலிருந்து ஒருவரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் தேர்வு செய்வார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
தற்போது லண்டனில் விடுமுறையை கழித்து வரும் சச்சின் டெண்டுல்கர் வீடியோ கான்ஃபரசிங் மூலம் பயிற்சியாளர் தேர்வு குறித்த ஆலோசனையில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
இந்தப் பணிகளில் தேர்வுக் குழு தலைவரும் முன்னாள் செயலாளருமான சஞ்சய் ஜெகத்லே ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


