தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விஜய் ஹஸாரே: தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்காலை 146 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வீழ்த்திய தமிழகம், போட்டியில் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:48 pm

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்காலை 146 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வீழ்த்திய தமிழகம், போட்டியில் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய பெங்கால் 39.1 ஓவா்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்கால் பௌலிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த தமிழகத்தில் அதிகபட்சமாக தினேஷ் காா்த்திக் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 87 ரன்கள் விளாசினாா். பெங்கால் பௌலிங்கில் முகேஷ் குமாா், ஆகாஷ் தீப் ஆகியோா் தலா 3 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் பெங்கால் பேட்டிங்கில் அபிஷேக் தாஸ் மட்டும் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்கள் சோ்க்க, தமிழக பௌலிங்கில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.