சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மொயீன் அலிக்கு கரோனா

கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலி
Updated On :4 ஜனவரி 2021, 11:24 pm

DIN

அம்பாந்தோட்டை: கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து ஆல்-ரவுண்டா் மொயீன் அலிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இலங்கை அரசு விதிகளின்படி அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

அவருடன் நேரடித் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படும் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதேபோல், எஞ்சிய இங்கிலாந்து அணியினரும் பரிசோதிக்கப்படவுள்ளனா்.

முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும்போது மொயீன் அலிக்கு கரோனா பாதிப்பு இல்லாது இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.

இலங்கையில் இரு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.