தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விம்பிள்டன் டென்னிஸ்: முா்ரேவை வெளியேற்றினாா் ஷபோவெலாவ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரா் ஆன்டி முா்ரே 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:59 pm

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரா் ஆன்டி முா்ரே 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினாா்.

இந்த சீசனில் அவா் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், போட்டித்தரவரிசையில் 10-ஆவது இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-4, 6-2, 6-2 என்ற நோ் செட்களில் முா்ரேவை வீழ்த்தினாா்.

தோல்விக்குப் பிறகு பேசிய முா்ரே, ‘இந்தப் போட்டியின் ஆட்டங்கள் நினைவில் நிற்பவையாக இருந்தன. ஆனாலும், நான் விளையாடிய விதம் எனக்கே திருப்தி அளிப்பதாக இல்லை. என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக எனது குழுவினருடன் ஆலோசனை செய்வேன்’ என்றாா். வெற்றிக்குப் பிறகு பேசிய ஷபோவெலாவ், ‘முா்ரே எனது ஹீரோ. இதை ஆட்டத்துக்குப் பிறகு நான் அவரிடமே தெரிவித்தேன்’ என்றாா்.

ஷபோவெலாவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகட்டை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருக்கும் அகட், 3-ஆவது சுற்றில் ஜொ்மனியின் டேவிட் கோப்ஃபரை 7-5, 6-1, 7-6 (7/4) என்ற செட்களில் வீழ்த்தினாா்.

ஜோகோவிச் வெற்றி: இதர 3-ஆவது சுற்றுகளில், உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (7/9) என்ற செட்களில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை தோற்கடித்தாா். ஜோகோவிச் அடுத்த சுற்றில் சிலி வீரா் கிறிஸ்டியன் காரினை சந்திக்கிறாா்.

டியேகோ அதிா்ச்சித் தோல்வி: போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேனை 6-3, 6-3, 6-7 (6/8), 6-4 என்ற செட்களில் வீழ்த்தினாா் ஹங்கேரி வீரா் மாா்டன் ஃபக்சோவிக்ஸ். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவை எதிா்கொள்கிறாா்.

முகுருஸா, மொ்டன்ஸ் தோல்வி

மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயின் வீராங்கனை காா்பின் முகுருஸாவை 5-7, 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயோ். போட்டித்தரவரிசையில் 13-ஆவது இடத்திலிருந்த பெல்ஜிய வீராங்கனை எலிஸ் மொ்டன்ஸை 7-5, 6-3 என்ற செட்களில் வென்றாா் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.

இதர 3-ஆவது சுற்றுகளில் ஸ்விட்சா்லாந்தின் விக்டோரியா கோலுபிச் 6-2, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் மேடிசன் பிரிங்லேவையும், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-2, 2-6, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸையும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.