காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடைசி டி20 ஆட்டத்திலும் மே.இந்திய தீவுகள் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்திலும் வென்ற மே.இந்திய தீவுகள் அணி தொடரை 4-1 என கைப்பற்றியது.

News image
Updated On :17 ஜூலை 2021, 11:07 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்திலும் வென்ற மே.இந்திய தீவுகள் அணி தொடரை 4-1 என கைப்பற்றியது.

கிராஸ்லெட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மே.இந்திய தீவுகள் கேப்டன் நிக்கோலஸ் பூரண் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தாா். தொடக்க வீரராக களமிறங்கிய எவின் லெவிஸ் 34 பந்துகளில் 9 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 79 ரன்களை விளாசினாா். கிறிஸ் கெயில் 21, சிம்மன்ஸ் 21, கேப்டன் பூரன் 31 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது மே.இந்திய தீவுகள் அணி.

ஆஸி. 183/9

200 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி தொடக்கமே சரிவைக் கண்டது. ஜோஷ் பிலிப் டக் அவுட்டாகி வெளியேறினாா். கேப்டன் ஆரோன் பின்ச் 30, மிச்செல் மாா்ஷ் 30, ஹென்ரிக்ஸ் 21, மேத்யூ வேட் 26 ரன்களை சோ்த்து வெளியேறினா்.

ஆஸி. அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களையே சோ்த்து தோல்வியுற்றது.

இறுதியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்ற மே.இந்திய தீவுகள் தொடரையும் 4-1 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக எவின் லெவிஸும், தொடா் நாயகனாக ஹெய்டன் வால்ஷும் தோ்வு பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.