பின்லாந்து - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
போட்டியின்போது டென்மார்க் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியன் எரிக்சன் என்ற வீரர் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டின் கோபன்ஹேகன் பகுதியிலுள்ள பார்கென் திடலில் ஐரோப்பிய லீக் தொடரில் பின்லாந்து - டென்மார்க் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று (ஜூன் 12) இரவு தொடங்கியது.
இதில் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. திடலில் வைத்தவாறே சுமார் 10 நிமிடங்களாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு அவர் செல்லப்பட்டார். இதனால் பின்லாந்து டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தமது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
7 ஏர்பேக், 360° கேமரா... ஜென்ஸீ இளைஞர்களுக்காக ஹூண்டாய் வெர்னா!
டிமான்டி காலனி - 3 குரு சோமசுந்தரம் அறிமுக விடியோ!

கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்ற வரும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை எப்போது?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

