சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நியூசிலாந்தை திணறடித்த சுழற்பந்து வீச்சாளர்கள்; கம்பேக் கொடுத்த இந்தியா

தேநீர் இடைவேளை வரை, 6 விக்கெட் இழப்புக்கு, நியூசிலாந்து 249 ரன்களை எடுத்துள்ளது.

News image
நியூசிலாந்தை திணறடித்த சுழற்பந்து வீச்சாளர்கள்
Updated On :27 நவம்பர் 2021, 9:01 am

DIN

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து ஒரு கட்டத்தில், இரண்டு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம், அக்சர் படேல் வீசிய பந்தில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அவர், மூத்த வீரர் ராஸ் டெய்லர் ஹென்றி நிகோல்ஸ் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார். ரச்சின் ரவிந்திரா, ஜடேஜாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தேநீர் இடைவேளை வரை, 6 விக்கெட் இழப்புக்கு, நியூசிலாந்து 249 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணிக்காக, அக்சர் மூன்று விக்கெட்டுகளையும் அஸ்வின் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். 

முன்னதாக, வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில், ஷிரேயஸ் ஐயா் - ரவீந்திரா ஜடேஜா ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 258-4 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஷிரேயஸ் ஐயா் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடா்ந்தனா்.

நியூஸி. பௌலா் டிம் சௌதியின் அபார பந்தில் போல்டாகி 50 ரன்களுடன் வெளியேறினார் ஜடேஜா. ஷிரேயஸ் - ஜடேஜா இருவரும் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்களை சோ்த்தனா். அவருக்கு பின் ஆட வந்த ரித்திமான் சாஹா 1 ரன் எடுத்த நிலையில் சௌதி பந்தில் உடனே பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடா்ந்து 105 ரன்களுடன் மெய்டன் சதம் அடித்த ஷிரேயஸ் ஐயரும் சௌதி பந்துவீச்சில் வில் யங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 171 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் சதமடித்தார் ஐயா்.

அக்ஸா் படேல் 3, இஷாந்த் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேற, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே கடைசி கட்டத்தில் நிலைத்து ஆடி 56 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்து அவுட்டானார். உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 111.1 ஓவா்களில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.