சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தொடரும் சிக்கல்: கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு பெற்ற டிம் பெயின்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வு பெற்றுள்ளார் ஆஸி. விக்கெட் கீப்பர் டிம் பெயின்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:03 am IST

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வு பெற்றுள்ளார் ஆஸி. விக்கெட் கீப்பர் டிம் பெயின்.

2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். 

2017-ல் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். இந்நிலையில் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நெருக்கடி நிலவியது. 

இந்நிலையில் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வாகியுள்ளார். 1956-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஷஸ் தொடரில் ஒரு வீரராக இடம்பெறத் தயார் என கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அறிவித்தார் டிம் பெயின். ஆனால் ஆஸி. அணியில் டிம் பெயின் நீடிப்பது அணிக்குத் தொந்தரவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளார் டிம் பெயின்.

மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து டிம் பெயின் தற்காலி ஓய்வு எடுத்துள்ளதாக அவருடைய மேலாளர் ஜேம்ஸ் ஹெண்டர்சன் ட்வீட் செய்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் டிம் பெயின் தற்காலிக ஓய்வை எடுத்துள்ளதாக கிரிக்கெட் டாஸ்மானியாவும் தகவல் அளித்துள்ளது. 

இதையடுத்து ஆஷஸ் தொடரிலிருந்து டிம் பெயின் விலகியுள்ளார். மீண்டும் அவர் எப்போது விளையாடுவார் என்று தெரியவில்லை. இதற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் மீண்டும் விளையாட முடியுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. 

36 வயது டிம் பெயின், 35 டெஸ்டுகள், 35 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணி தோற்றாலும் 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை சமன் செய்து கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.