ஒமிக்ரான் கரோனா பரவல்: பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒத்திவைப்பு
By DIN | Published On : 27th November 2021 07:34 PM | Last Updated : 27th November 2021 07:34 PM | அ+அ அ- |

ஒமிக்ரான் கரோனா பரவல்: பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒத்திவைப்பு
புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த சர்வதேச இளையோர் பெண்கள் உலககோப்பை ஹாக்கி போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிக்க | பொதுவிநியோகத் திட்டம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை
இந்நிலையில் சர்வதேச இளையோர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை தற்காலிகமாக ஒத்திவைத்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி உலகக்கோப்பை போட்டி நடைபெற இருந்தது. பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு
கரோனா நிலைகளைக் கருத்தில் கொண்டு போட்டி தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.