90 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ) 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
90 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ) 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் 1-1 என சமநிலையில் இருந்ததால் நேற்றைய போட்டி முக்கியமான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் ஹெண்டிரிக்ஸ் 50 பந்துகளில் 70 ரன்களும், ரோஸவ் 18 பந்துகளில் 31 ரன்களும், மார்கரம் 36 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து 20 ஓவர்களுக்கு 191 ரன்களை எடுத்தது. 

பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. 

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷம்ஸி 5 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். ஹெண்டிரிக்ஸ் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com