திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காதலியை மணந்தார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ்

கடந்த வரும் ஆண் குழந்தைக்குத் தந்தையானார் கம்மின்ஸ்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 2:12 pm IST

ஆஸி. டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

29 வயது பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 43 டெஸ்டுகள், 73 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருட டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

2013-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த பெக்கி பாஸ்டனைச் சந்தித்தார் பேட் கம்மின்ஸ். பிறகு இருவரும் காதலர்கள் ஆனார்கள். ஜூன் 2020-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவித்தார் கம்மின்ஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் ஆண் குழந்தைக்குப் பெற்றோர் ஆனார்கள். 

இந்நிலையில் 31 வயது பெக்கி பாஸ்டனைக் கடந்த சனிக்கிழமையன்று திருமணம் செய்துள்ள பேட் கம்மின்ஸ், திருமணப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். இத்திருமணத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஜோஷ் ஹேஸில்வுட், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், டிம் பெயின் போன்றோர் கலந்துகொண்டார்கள். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸில் உள்ள கடற்கரை நகரமான பைரோன் பே-வில் இத்திருமணம் நடைபெற்றது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.