தென்னாப்பிரிக்காவில் டி20: 6 அணிகளை வாங்கிய ஐபிஎல் அணிகள்

இந்தியாவின் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளில் 6 அணிகளை ஏலத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோபுப் படம்
கோபுப் படம்
Updated on
1 min read

இந்தியாவின் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டிகளில் 6 அணிகளை ஏலத்தில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் போன்றே டி20 தொடரினை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்கவில் 6 அணிகளை ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் தென்னாப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் கிரிம் ஸ்மித்  தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துஇன் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

ஐபிஎல் அணிகள் எந்தெந்த அணிகளை வாங்கியுள்ளது?

மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் 
சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பெர்க் 
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்- டர்பன் 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போர்ட் எலிசபெத் 
டெல்லி கேப்பிடல்ஸ் - பிரிட்டோரியா 
ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல்

இந்த தொடருக்காகத்தான் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தினை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனவரி 2023இல் இந்த போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com