கோலியிடம் நான் 20 நிமிடம் பேசினால்...: கவாஸ்கர்

இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கோலியிடம் நான் 20 நிமிடம் பேசினால்...: கவாஸ்கர்

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ளார் விராட் கோலி. இங்கிலாந்தில் விளையாடிய ஆறு இன்னிங்ஸில் ( ஒரு டெஸ்ட், தலா 2 ஒருநாள், டி20) மொத்தமாக 76 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

கோலியின் தடுமாற்றம் பற்றி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

என்னால் கோலியிடம் 20 நிமிடம் பேச முடிந்தால் அவருக்கு உதவ முடியும். குறிப்பாக ஆஃப் ஸ்டம்ப் பக்கம் வரும் பந்துகளில் அவருக்கு ஏற்படும் தடுமாற்றம் பற்றி. தொடக்க வீரராக ஆஃப் ஸ்டம்ப் பக்கம் வரும் பந்துகளால் அதிகமாகச் சிக்கலுக்கு ஆளான என்னால் அவருக்கு இவ்விஷயத்தில் உதவி செய்ய முடியும். சில அம்சங்களை நீங்கள் முயற்சி செய்யவேண்டும். அவருடைய முதல் தவறே கடைசித் தவறாகவும் இருக்கலாம். சமீபகாலமாக அவர் ரன்கள் எடுக்காத நிலையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ரன்கள் எடுக்க முயல்கிறார். இங்கிலாந்துத் தொடர்களில் நல்ல பந்துகளிலும் அவர் ஆட்டமிழந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்பதில் இருந்து கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு கோலி வழக்கம்போல் நன்றாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com