பிரபல மே.இ. தீவுகள் வீரர் ஓய்வு அறிவிப்பு

கடைசியாக மே.இ. தீவுகள் அணிக்காக 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். 
பிரபல மே.இ. தீவுகள் வீரர் ஓய்வு அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த 37 வயது லெண்டில் சிம்மன்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

16 வருடங்களாக மே.இ. தீவுகள் அணிக்காக 8 டெஸ்டுகள், 68 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் சிம்மன்ஸ் விளையாடியுள்ளார். 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2016 டி20 உலகக் கோப்பையை மே.இ. தீவுகள் அணி வென்றது. அப்போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற உதவினார். கடைசியாக மே.இ. தீவுகள் அணிக்காக 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். 

டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சிம்மன்ஸ், சிபிஎல் டி20 லீக் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 2015, 2017-ல் கோப்பைகளை வென்றபோது அந்த அணியில் சிம்மன்ஸ் இடம்பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com