
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே தொடர்பான 2021-2022இன் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளதால் அவர் சிஎஸ்கேவில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2022 ஐபிஎல் போட்டியில் தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பதவி ஏற்றார். ஆனால் அவர் கேப்டன் ஆனது தோல்விகளையே சந்தித்ததாலும் அவரது பேட்டிங் பவுலிங் மோசமானதாலும் பாதியிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். பிறகு காயம் காரணமாக மற்றைய போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே தொடர்பான 2021-2022 அனைத்து புகைப்படங்களையும் அழித்துள்ளார். மேலும் இந்தாண்டு தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், ஜடேஜா இந்திய அணியில் துணைக் கேப்டனானதற்கு சிஎஸ்கே பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைக்குறித்து சிஎஸ்கே நிர்வாகம் கூறியதாவது:
இது அவரது தனிப்பட்ட முடிவு. எங்களது பக்கமிருந்து அப்படி அதுவும் செய்யவில்லை. அவர் இப்படி செய்தது எங்களுக்கு தெரியவுமில்லை. ஆல் ஓக்கே. அதனால் எதுவும் பிரச்சினையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.