இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பையில் நிச்சயமாக இருப்பார்: வாசிம் ஜாபர்

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக இடம்பெருவார் என கருத்துத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 ஜூலை 2022, 1:14 pm IST

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக இடம்பெருவார் என கருத்துத் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஒவரில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட் யாரென்றால் இங்கிலாந்தின் புதிய கேப்டன் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர். பட்லர் ஆடிய முதல் பந்திலேயே போல்ட் ஆக்கினார் புவனேஷ்வர்குமார். நல்ல பார்மில் இருந்த பட்லரை வீழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி பாராட்டி மகிழ்ந்தனர். 

2வது டி20 போட்டி இன்று இரவு எட்ஜ்பாஸ்டனில் இரவு 7 மணிக்கு நடைப்பெற உள்ளது. 

அக்டோபரில் முதல் வரவிருக்கும் டி20 உலக கோப்பை அணிக்கு யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் வந்துக்கொண்டுள்ள நிலையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது: 

சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமார் அளவுக்கு பந்தினை ஸ்விங் செய்யும் வீரர்கள் குறைவு. அவரது ஸ்விங்கினால் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். வலுவான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அருமையாக பந்து வீசி வருகிறார் புவனேஷ். அவர் நிச்சயமாக இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெருவார். அதில் எனக்கு சந்தேகமே இல்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.