அறிமுக வீரருக்கு 6 விக்கெட்டுகள்: முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது.
பிரபாத் ஜெயசூர்யா
பிரபாத் ஜெயசூர்யா

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

கேலேவில் நடைபெறும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் 109, கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள், மார்னஸ் லபுஷேன் 104 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது. ஸ்மித் 145 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 6 பேட்டர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். டெஸ்டில் அறிமுகமான 30 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com