18 மாதங்களுக்குப் பிறகு சதமடித்த நட்சத்திர வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். 
18 மாதங்களுக்குப் பிறகு சதமடித்த நட்சத்திர வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர், ஃபேப் 4இல் முக்கியமான வீரருமான் ஸ்டீவன் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளார். இது அவரது 28வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் 28வது சதத்தை அடித்தப் பிறகு 8125 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 8074 ரன்களுடன் பின்தங்கியுள்ளார். ஜோ ரூட்க்குப் பிறகு அதிக ரன்களை எடுத்துள்ள ஃபேப் 4 வீரர்களில் 2வது இடத்தில் ஸ்மித் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அட்டகாசமான 4 வீரர்களில் 28 சதங்களுடன் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் சமநிலையில் உள்ளனர். விராட் கோலி 27 சதத்துடன் இருக்கிறார். வில்லியம்சன் 24 சதத்துடன் இருக்கிறார். 

இலங்கை ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 298 ரன்கள் 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதில் மார்னஸ் லபுசேன் சதமடித்து ஆட்டமிழந்தார். 

இரண்டாம் நாள் போட்டி தொடங்கியிருக்கிறது. தற்போது ஸ்மித் 130 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com